சேலம், : மாவட்ட உணவு பாது காப்பு துறையின் சார்பில் பார்க் பிளாசா ஹோட்டலில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
சமூக நலத்துரை அலுவலர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அம்சவேணி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் வெங்கடேசன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். உலக உணவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் பரிசுகள் வழங்கி னார். விழிப்புணர்வு துண்ட றிக்கையை வெளியிட்டார்.
உணவுக் கலப்படம் மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்ப்பது குறித்து நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா பேசியதாவது: உலக உணவு தினத்தை முன்னிட்டு நான்கு விஷயங்களை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பைகளால் சூடான உணவு களை எடுத்துச் செல்வதை தடை செய்ய உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலிஎத்திலீன், பாலி வினைல் குளோரைடு, பாலி ஸ்டைரின் ஆகிய வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து விடுகிறது. இதனால் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இரண்டாவதாக உணவுப் பொருட்களை செய்தித் தாளில் வைத்து பயன்படுத்துவதும் தடுக்கப்படும். பேக்கரி பொருட்களை செய்தித் தாள்களில் வைப்பதால் காரீய நச்சு கலக்கிறது. இதற்கு பதிலாக பட்டர் பேப்பர் மற்றும் காகிதத் தட்டு பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பதால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க கண்ணாடிப் பெட்டியில் வைத்து விற்க வேண்டும்.
திரும்பத் திரும்ப பயன்படுத்தும் எண்ணெயால் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க பாக்கெட்டில் உள்ள சமையல் எண்ணெயை தினமும் பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும். மேலும் உணவில் கலப்படம், செயற்கை வண்ணங்கள் மற்றும் ரசாயனக் கலப்பு உடல் நலத்துக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கிறது. பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாப்பது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை. உணவுக் கலப்படம் மற்றும் உணவு நஞ்சாகும் வாய்ப்புகளை தவிர்க்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண் டும். இவ்வாறு அனுராதா பேசினார்.
கழிவு மேலாண்மை குறித்து ஹோட்டல் அலுவலர் ராகுல்கனுங்கோ பேசினார். உடல் நலத்தை பாதுகாக்க நமது பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் மகரபூஷணம் தனது பேச்சில் வலியுறுத்தினார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Thanks for sharing this blog. Tamilnadu is one of highest milk producing state India. SFTS is one of the pvt company playing major role in safety and preservation of milk. SFTS is having milk test units too. visit -
ReplyDeleteFood Testing Laboratory Near Me
Food Testing Labs in Chennai