தலைவாசல்:
ஆத்தூர் அருகே, தலைவாசல் பகுதியில் உள்ள, சேகோ ஃபேக்டரிகளில், உணவு
பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விஷத் தன்மை கொண்ட, சல்பியூரிக்
அமிலம், ஆப்டிக்கல் ஒயிட்னரை பறிமுதல் செய்து அழித்தனர்.சேலம்,
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், ஈரோடு உள்பட, 18 மாவட்டங்களில், மரவள்ளி
கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்கு
அறுவடை செய்து, சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம் பகுதியில் உள்ள,
420க்கும் மேற்பட்ட சேகோ ஃபேக்டரிகளில், அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச்
(மாவு) தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசி, ஸ்டார்ச், வட மாநிலங்களில், உணவு
மற்றும் மருந்து, உணவு பொருட்கள் தயாரிப்புகளுக்கு, சேலத்தில் இருந்து,
அதிகளவில் அனுப்புகின்றனர்.இந்நிலையில், ஜவ்வரிசி, வெண்மை நிறத்தில்
இருப்பதற்காக, ஜவுளி மற்றும் பேப்பர் வாஷிங் உபகரணங்களுக்கு சுத்தப்படுத்த
பயன்படுத்தும், விஷத் தன்மை கொண்ட ஆப்டிக்கல் ஒயிட்னர் (ஹைப்போ கரைசல்),
சல்பியூரிக் அமிலம் ஆகியவை, சேகோ ஃபேக்டரிகளில் பயன்படுத்துவதாக, புகார்
எழுந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான, உணவு பாதுகாப்பு சுகாதார அலுவலர்கள் முனுசாமி, கோவிந்தராஜ், சந்திரசேகரன், புஷ்பராஜ், ரவிக்குமார், சிங்கராவேல், ஜான்கென்னடி என, மூன்று குழுக்கள், ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டி பகுதியில் உள்ள, சேகோ ஆலைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.தலைவாசல் யூனியனில், 24 சேகோ ஃபேக்டரிகளும், கெங்கவல்லியில், 16 சேகோ ஃபேக்டரிகள் என, மொத்தம், 43 சேகோ மற்றும் ஸ்டார்ச் ஆலைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.இதில், சார்வாய், பெரியேரி, மும்முடி பகுதியில் உள்ள, நான்கு சேகோ ஃபேக்டரிகளில், இரண்டு பேரல் சல்பியூரிக் அமிலம், 14 பேரல், "ஆப்டிக்கல் ஒயிட்னர்' ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்."மீண்டும் ரசாயன அமிலம் உள்ளிட்டவை பயன்படுத்தினால், உணவு பாதுகாப்பு சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

No comments:
Post a Comment