மேட்டூர்:
பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில், தீபாவளிக்காக ஸ்பெஷலாக
தயாரிக்கப்படும் இனிப்புகளை, சாம்பிள் எடுத்து சோதனை செய்து நடவடிக்கை
எடுக்க உணவு பாதுகாப்புதுறை முடிவு செய்துள்ளது.தீபாவளி பண்டிகைக்காக ஒரு
வாரத்துக்கு முன் இருந்தே, ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரிகளில் ஸ்பெஷல் ஸ்வீட்
தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்படும். தரமான ஆயில், சர்க்கரை, மாவு,
நிர்ணயிக்கப்பட்ட கலர் ஆகியவற்றை பயன்படுத்தியே ஸ்வீட் தயாரிக்க
வேண்டும்.ஆனால், பெரும்பாலான பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் கலப்பட
ஆயில், தரமற்ற உணவு பொருட்களை கொண்டு, நிர்ணயித்த அளவை விட கூடுதலான கண்ணை
பறிக்கும் கலரில் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்வீட்
சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.இதை தடுக்க
நடப்பாண்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் பேக்கரி மற்றும் ஸ்வீட்
ஸ்டால்களில் தயாரிக்கும் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்களில், சந்தேகத்துக்கு உரிய
ஸ்வீட்களை சாம்பிள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்பு துறை
முடிவு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர்
டாக்டர் அனுராதா கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு, சேலம் மாவட்டம்
முழுவதும் பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை
சார்பில், ஏழு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவினர் தங்களுக்கு
தங்கள் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஸ்டால்களில் ஆய்வு மேற்கொண்டு
சந்தேகத்துக்கு உரிய ஸ்வீட்களை சாம்பிள் எடுத்து ஆய்வுக்கு அனுப்புவர்.
ஆய்வில் தரமற்ற பொருட்களை கொண்டு ஸ்வீட்ஸ் தயாரித்துள்ளது தெரியவந்தால், சம்பந்தபட்ட ஸ்டால் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்
ஆய்வில் தரமற்ற பொருட்களை கொண்டு ஸ்வீட்ஸ் தயாரித்துள்ளது தெரியவந்தால், சம்பந்தபட்ட ஸ்டால் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment