Oct 24, 2013

சேலம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடை, திருமண மண்டபங்களில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தகவல்

சேலம், அக்.24-சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடை, திருமண மண்டபங்களில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்துள்ளார்.இனிப்பு, கார வகைகள்இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 2-ந் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் முக்கிய அம்சமாக இனிப்பு, கார வகைகள் செய்து உறவினர்கள் வீடுகள் உள்பட அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு(சுவிட்ஸ்) கடைகள் மற்றும் திருமண மண்டபங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.6 குழுக்கள் அமைப்புஇந்த நிலையில் இனிப்பு, கார வகைகள் கலப்படம் இல்லாமல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடை மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவு இனிப்பு, கார வகையில் செய்யும் பணி தொடங்கி விட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் தரமானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடுமையான நடவடிக்கைசேலம் மாநகரில் எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடைகளில் சோதனையை தொடங்கி விட்டனர். இனிப்பு, கார வகைகளை சுத்தமான எண்ணெயில் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலக்க கூடாது.சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகள் செய்வது கண்டறியப்பட்டால் அவற்றை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பவதுடன், தயாரித்த உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment