சேலம்: சேலத்தில் உள்ள குளிர்பான நிறுவனத்தில், நேற்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவர், வி.எஸ்.என்., என்ற குளிர்பானம் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். பிரபல கம்பெனிகளின் பாட்டில்களில், குளிர் பானத்தை அடைத்து விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு அலுவகத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நிர்வாக அலுவலர் அனுராதா தலைமையில், அதிகாரிகள் நரசோதிப்பட்டியில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது, காலி பாட்டில்கள், பாட்டில்களில் பேக் செய்யப்பட்டுள்ள குளிர் பானம் ஆகியவற்றை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். ""ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பொருட்கள், 15 நாட்களுக்குள் தரம் உறுதி செய்யப்பட்ட பின், விற்பனையை தொடர அனுமதி வழங்கப்படும்,'' என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

No comments:
Post a Comment