கிருஷ்ணகிரி, செப்.25:
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் சில தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தரமற்ற
குடிநீரை கேன், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக வந்த புகாரை
தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில் விதிமுறைகளை
முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர்
தயாரிக்கப்படுவதாகவும் 13 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில்
பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு
நிறுவனத்தில் அதிகாரிகள் வைத்த சீலை அகற்றி, குடிநீர் தயாரித்து, விற்பனை
செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்
கலைவாணி அந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சீல்
அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பர்கூர் போலீசில் இது
குறித்து புகார் செய்தார். இதன் அடிப்படையில் அந்த தனியார் குடிநீர்
சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ்(40) என்பவர் மீது
இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment