பாப்பிரெட்டிப்பட்டி, செப்.13:
பாப்பிரெட்டிப்பட்டி
அருகே, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதை
அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட
பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு
தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு
பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி டாக்டர் தினேஷ்
தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மொரப்பூர் சேகர்,
பென்னாகரம் சிவமணி, தர்மபுரி கோபிநாதன், காரிமங்கலம் ராஜேந்திரன்,
நல்லம்பள்ளி நந்தகோபால், பாலக்கோடு சந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி குமரன்
ஆகியோர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒடசல்பட்டி,
மணியம்பாடி, கடத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட
சோதனையின் போது, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி
வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், முதல் முறை என்பதால்
வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்து விட்டு விட்டனர். தடையை மீறி இது போல
விற்பனை செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment