Sep 13, 2013

மினி லாரியில் கடத்திச்சென்ற 10 லட்சம் குட்கா பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது - டிரைவர் கைது

தண்டையார்பேட்டை, செப்.13:
வாகன சோதனையின்போது மினி லாரியில் கடத்தப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தண்டையார்பேட்டை& எண்ணூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூரை நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அதை மறித்து நிறுத்திய போலீசார் லாரியில் சோதனை போட்டனர். அதில் நிறைய பண்டல்கள் இருந்தன. டிரைவர் அது துணி பண்டல் என்றார். சந்தேகம் அடைந்த போலீசார் பிரித்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் மினிலாரியில் இருந்த 3.5 டன் எடையுள்ள 160 புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 10லட்சம் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை புகையிலை பண்டல்களையும், லாரி டிரைவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவரிடம் விசாரித்தபோது, திருவொற்றியூரை சேர்ந்த அருள் (40) எனவும், கொடுங்கையூரில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசார் புகையிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. யாரிடம் சேர்க்க உள்ளது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என டிரைவர் அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment