இதைத்தொடர்ந்து
டாக்டர் அனுராதா மற்றும் அலுவலர்கள் திருமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர்
விரைந்து சென்று முதல் கட்டமாக பூட்டி ‘சீல்‘ வைத்தனர். இதன் மூலம்
சுகாதாரமற்ற குடிநீர் வெளியில் விநியோகம் செய்வது முதல் கட்டமாக
தடுக்கப்பட்டது. ‘சீல்‘ வைக்கப்பட்ட செய்தி தினத்தந்தியில் நேற்றே
வெளியானது.2-வது நாளாக சோதனைஇந்த நிலையில் நேற்று 2-வது
நாளாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அலுவலர்கள்
திருமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சேலம் இட்டேரி
ரோட்டில் உள்ள நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு சீல் வைக்கப்பட்ட குடிநீர்
கேன் நிறுவனம் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.அங்கு மினரல்
வாட்டர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாண்ட் எந்த நிலையில் உள்ளது
என்றும், முறைப்படி மினரல் வாட்டர் நிறுவனம் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா?
என ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆனால், உரிமையாளரான தீபக் எவ்வித உரிமமும்
பெறவில்லை. ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல், போலியாக ஐ.எஸ்.ஓ. என்ற ஒரு
லேபிளை அவரை தயார் செய்து கேன்களில் ஒட்டி இருப்பதும் தெரியவந்தது. மேலும்
பல்வேறு கேன்கள் வேறு மினரல் வாட்டர் நிறுவனத்தில் உள்ளவை என்பதும்
கண்டறியப்பட்டது. மேலும் குடிநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படாமல்
சுகாதாரமற்ற முறையில் பாட்டிலில் அடைக்கப்பட்டிருப்பதையும் அதிகாரிகள்
கண்டு பிடித்தனர். பின்னர் பிளாண்டில் இருந்த 24 குடிநீர் கேன்களுடன்
மீண்டும் அதிகாரிகள் அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.உரிமையாளர் போலீசில் ஒப்படைப்புஅதன்பின்னர்,
போலியாக மினரல் வாட்டர் தயாரித்த தீபக், அன்னதானப்பட்டி போலீசில்
ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் விசாரணை நடத்தி
வருகிறார். விசாரணையில், சேலம் மாநகரில் தற்போது மாநகராட்சி வழங்கும்
குடிநீர் சப்ளை 15 நாட்கள், 20 நாட்களுக்கு ஒருமுறை ஆவதால், வீடுகளுக்கு
அதிகப்படியான குடிநீர் தேவைப்பட்டது. அதை கருத்தில் கொண்டு போலியாக
குடிநீர் பிளாண்ட் தயார் செய்து 20 லிட்டர் கேன் ரூ.25 முதல் ரூ.30 வரை
விற்பனை செய்தது தெரியவந்தது.தீபக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை
நடத்தி வருகிறார்கள். அக்கம் பக்கம் போலீசார் விசாரிக்கையில் கடந்த 6
மாதமாகவே தீபக், மினரல் வாட்டர் நிறுவனம் வைத்து கேன் குடிநீர் விற்பனை
செய்வது தெரியவந்துள்ளது.ஆணையாளருக்கு பரிந்துரைஇந்த
நிலையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, மினரல் வாட்டர்
நிறுவனம் நடத்தி வந்த தீபக்கிற்கு அவசர கால தடையாணை நோட்டீசு அனுப்பி
இருக்கிறார். மேலும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மாநில ஆணையர்
குமார்ஜெயந்திற்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவசரகால தடையாணை
பிறப்பிக்க பரிந்துரை செய்துள்ளார்.அந்த பரிந்துரை ஆணையில், தீபக் தயார்
செய்து விற்பனை செய்த குடிநீர் பாட்டிலில் ஐ.எஸ்.ஐ. தரமுத்திரை இல்லாமலும்,
குடிநீர் தயார் செய்யும் இடம் சுகாதாரமற்ற முறையிலும், குடிநீர்
பாதுகாப்பற்ற நிலையில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரப்பும் காரணியாகவும்
உள்ளது. எனவே, மேற்படி இடத்தில் குடிநீர் தயார் செய்து விற்பதற்கு தடை
விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aug 31, 2013
சேலத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு புகார் எதிரொலி: ‘சீல்’ வைக்கப்பட்ட போலி குடிநீர் கேன் நிறுவனத்தில் மீண்டும் சோதனை உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment