Jul 3, 2013

புகையிலை புற்று நோயால்நகரங்களில் மரணம் அதிகரிப்பு

"புகையிலை புற்றுநோயால் நகரப்பகுதியில் தான், 63 சதவீதம் பேர் பலியாகின்றனர்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார்.மேட்டூரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை மற்றும் நுகர்வோர் அமைப்பு சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, நகராட்சி பொறியாளர் (பொ) சுகுமார் முன்னிலை வகித்தனர்.மேட்டூர் சதுரங்காடியில் இருந்து புகையிலை உபயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேனர்களுடன் மாணவ, மாணவியர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். டாக்டர் அனுராதா கூறியதாவது:இந்தியாவில் புகையிலை புற்றுநோய்க்கு ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில், நகரப்பகுதியில் மட்டும், 63 சதவீதம் பேர் பலியாகின்றனர். புகையிலை, பான்பராக், குட்கா விற்பனைக்கு இந்தியாவில், 25 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுளளது.தமிழகத்தில் கடந்த, 22ம் தேதிக்கு பின், பான்பராக், குட்கா விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பேரணியில் மேட்டூர் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment