தூத்துக்குடி: கோவில்பட்டியில், கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட, 20 டன்
மாம்பழங்களை, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி
கடைகளில், கார்பைடு கற்களால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்,
விற்கப்படுவதாக, தூத்துக்குடி மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ்
சந்திரபோஸிற்கு புகார் வந்தது. அவரது தலைமையில், அதிகாரிகள் நேற்று, புது
பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள, பழ வியாபாரி கருப்பசாமியின் குடோனில் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து, கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட, 20 டன் மாம்பழங்களை பறிமுதல்
செய்து, அழித்தனர். உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்கும், கார்பைட் கல் மூலம் பழுக்க
வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்கக்கூடாது என வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் அறிவுரை
கூறினர்.
No comments:
Post a Comment