Jul 3, 2013

பழநியில் குட்கா விற்பனை "ஜோர்'

பழநி:பழநி பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா,பான்மசாலா விற்பனை அதிகளவில் நடக்கிறது. இதுவரை 5 முதல் 8 ரூபாய்க்கு விற்ற, குட்கா,பான்மசாலா பாக்கெட்டுகள், தற்போது 15 ரூபாய் வரை மறைத்து வைத்து விற்கப்படுகிறது.இவற்றை விற்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
பழநி உணவு கட்டுப்பாடு அதிகாரி மோகனரங்கன் கூறுகையில், சென்னையில் வியாபாரிகள் சங்கத்தினர் கேட்டுகொண்டதால், குட்கா, பான்மசாலா விற்க ஒரு வாரம் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால், நடவடிக்கை எடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment