Jun 26, 2013

கோவை கடைகளில் 2வது நாளாக பான்மசாலா, குட்கா ரெய்டு

கோவை, ஜூன் 26:
கோவையில் உள்ள கடைகளில் இரண்டாவது நாளாக பான்மசாலா, கு க்ஷ்ட்கா ரெய்டு நடந்தது. ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசு பான் மசலா, குட்கா உள்ளிட்ட வாயில் மெல்லும் புகையி லை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டு துறையின்கீழ் இயங்கும், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரெய்டு துவக்கினர். ஒரே நாளில் 30 ஆயிரம் பாக்கெட்டுகளை பறிமுதல்செய்தனர்.
நேற்று இரண்டாவது நாளாக ரெய்டு நடந்தது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் சந்திரன், கோவிந்தராஜ், ஜெரால்டு, ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய ஏழு குழுவினர் மாநகர் முழுவதும் ரெய்டு நடத்தினர். ரங்கே கவுடர் வீதி, சரவணம்பட்டி, ரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மொத்த வியாபாரிகளின் குடோன் முதல் சில்லரை வியாபாரிகளின் கடைகள் வரை இந்த ரெய்டு நடந்தது. இறுதியில், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆயிரம் பான்மசாலா, குட் கா பாக்கெட்டுகளை பறிமுதல்செய்தனர். இச்சாத னை தொடரும் என்றனர்.

No comments:

Post a Comment