ரூ.5 கூடுதலாக கொடுத்து வாங்கினாலும்,
மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
என்றார் கடலூரில் உள்ள மதுக்கடையில் பிராந்தி வாங்கிய இளைஞர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்தவர் காதர் (30). இவர் கடலூரில் தங்கி ஹோட்டலில் வேலைப் பார்த்து வருகிறார்.
இவர் செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் பஸ் நிலையம் அருகே கடலூர் -
சிதம்பரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்
வாங்கியுள்ளார்.
பாட்டிலை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மதுவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.
விற்பனையாளரிடம் காட்டினால் சமாதானம் செய்ய முயற்சிப்பர் என கருதி,
செய்தியாளர்களை சந்தித்து மதுபாட்டிலை காட்டி விட்டு சென்றார். அப்போது
அவர் கூறுகையில், "ரூ.70 குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.75 வாங்குகின்றனர்.
அதிலும் கரப்பான்பூச்சி கிடந்தது வேதனையை அளிக்கிறது' என்றார்.
No comments:
Post a Comment