திண்டுக்கல்
அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட தோட்டனூத்து ரோட்டில் உள்ள
ஸ்படிகம் மினரல்வாட்டர் கம்பெனி மற்றும் சென்னமநாயக்கன்பட்டி எஸ்ஏபி.மினரல்
வாட்டர் கம்பெனியில் குடிநீரை கையாளும் பணியாளர்களுக்கான
விழிப்புணர்வுக்கூட்டம் நடந்தது. திண்டுக்கல், குஜிலியம்பாறை வட்டார உணவு
பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், சகுபர்சாதிக் ஆகியோர் விளக்கம்
அளித்தனர்.
தன்சுத்தம், குடிநீரின் தரம்,
இயற்பியல், வேதியியல், மைக்ரோ&பயாலஜி வரையறுக்கப்பட்ட ஆய்வக அளவுகள்,
பதிவேடுகள் பராமரிப்பு, பேக்கிங் செய்யப்படும் பாட்டில், கேன்,
பாட்டில்களின் அங்கீகரிக்கப்பட்ட தர அளவீடுகள், அதனை கிருமி தொற்று நீக்கம்
செய்வது, லேபிள்விளக்கம் மற்றும் கம்பெனி உட்புற, சுற்றுப்புற சுகாதாரம்,
குடிநீரைக் கொண்டு செல்லும் வாகன பராமரிப்பு குறித்து விளக்கப்பட்டது.
குடிநீர்
சுத்திகரிப்பு நிறுவன ஆலை பணியாளர்கள், குடிநீர் வர்த்தகம் செய்வோர், வாகன
ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன
இயக்குநர்கள் மனோகரன், மகேஸ்வரன், பூர்ணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment