Jul 7, 2017

குளிர்பானம் குடிக்க போறீங்களா கவனம் தேவை

விருதுநகர், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் அனைத்திலும் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர்பாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இதில் பல கடைகளில் போலியான, காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர் கந்தக பூமி என்பதால் வெயிலின் தாக்கத்தை தணிக்க கடைகளுக்கு செல்லும் விழிப்புணர்வு இல்லாத மக்கள், கடைக்காரர்கள் கொடுக்கும் ஏதாவது ஒரு குளிர்பானத்தை 
குடித்து விட்டு செல்கின்றனர். வாங்கும் போது அது எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது, காலாவதி நாள், அதில் கலந்துள்ள பொருள்கள் குறித்து பார்ப்பதில்லை. அவசரத்தில் கடைக்காரர்கள் கொடுக்கும் குடிநீர் பாட்டில், குளிர்பானங்களை குடித்து விட்டு செல்கின்றனர். 
கூடுதல் விலை
பல கடைகளில் போலி நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானம், குடிநீர் பாட்டில், மற்றும் காலாவதியான குளிர்பானங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்கின்றனர். அதிலும் சில கடைக்காரர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
கிராமம் தான் குறி
விருதுநகரில் எப்போதும் குளிர்பானங்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். இதை பயன்படுத்தி சிலர் உரிய அனுமதி பெறாமல் போலி குளிர்பானம், குடிநீர் பாட்டில் தயார் செய்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 
கடைகளில் குளிர்பானம் தயாரித்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற போலியான, தரமில்லாதவைகள் அனைத்தும் கிராமப்புறங்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பள்ளிகள், கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை போன்ற இடங்களில் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்படுகிறது. 
கண்காணிப்பு தேவை
இதனால் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. எனவே அவ்வப்போது பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வாளர்கள் கூறுகின்றனர்.
போலிகள்
மணிகண்டன், விருதுநகர், “பெரும்பாலான பெட்டிக்கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்கப்படுகிறது. அதை பார்க்கும் போதே போலியானவை என தெரிகிறது. பள்ளி மாணவர்கள் தரமில்லாத பாக்கெட் குளிர்பானங்களையே தேடி வாங்கி குடிக்கின்றனர். 
தொடர்ந்து வாங்கி குடிப்பதால் பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அதுபோல் பெரும்பாலான கடைகளில் முகவரியில்லாத கம்பெனிகள் தயாரிக்கும் போலியான, காலாவதியான குளிர்பானம், தண்ணீர்பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. 
இதனை தடுத்து, ஆரோக்கியமான பொருள் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். விருதுநகர், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் அனைத்திலும் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர்பாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இதில் பல கடைகளில் போலியான, காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் கந்தக பூமி என்பதால் வெயிலின் தாக்கத்தை தணிக்க கடைகளுக்கு செல்லும் விழிப்புணர்வு இல்லாத மக்கள், கடைக்காரர்கள் கொடுக்கும் ஏதாவது ஒரு குளிர்பானத்தை குடித்து விட்டு செல்கின்றனர். வாங்கும் போது அது எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது, காலாவதி நாள், அதில் கலந்துள்ள பொருள்கள் குறித்து பார்ப்பதில்லை. அவசரத்தில் கடைக்காரர்கள் கொடுக்கும் குடிநீர் பாட்டில், குளிர்பானங்களை குடித்து விட்டு செல்கின்றனர். கூடுதல் விலை பல கடைகளில் போலி நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானம், குடிநீர் பாட்டில், மற்றும் காலாவதியான குளிர்பானங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்கின்றனர். அதிலும் சில கடைக்காரர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. கிராமம் தான் குறி விருதுநகரில் எப்போதும் குளிர்பானங்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். இதை பயன்படுத்தி சிலர் உரிய அனுமதி பெறாமல் போலி குளிர்பானம், குடிநீர் பாட்டில் தயார் செய்து விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடைகளில் குளிர்பானம் தயாரித்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற போலியான, தரமில்லாதவைகள் அனைத்தும் கிராமப்புறங்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பள்ளிகள், கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை போன்ற இடங்களில் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கண்காணிப்பு தேவை இதனால் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. எனவே அவ்வப்போது பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வாளர்கள் கூறுகின்றனர். போலிகள் மணிகண்டன், விருதுநகர், “பெரும்பாலான பெட்டிக்கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்கப்படுகிறது. அதை பார்க்கும் போதே போலியானவை என தெரிகிறது. பள்ளி மாணவர்கள் தரமில்லாத பாக்கெட் குளிர்பானங்களையே தேடி வாங்கி குடிக்கின்றனர். தொடர்ந்து வாங்கி குடிப்பதால் பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அதுபோல் பெரும்பாலான கடைகளில் முகவரியில்லாத கம்பெனிகள் தயாரிக்கும் போலியான, காலாவதியான குளிர்பானம், தண்ணீர்பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுத்து, ஆரோக்கியமான பொருள் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment