சிவகங்கை: சமையல் எண்ணெய் பாக்கெட்களில் 'கொலஸ்ட்ரால் இல்லை'என்ற வாசகம் எழுதுவதற்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
கடலை, சூரியகாந்தி, தேங்காய், எள் போன்ற தாவரங்களில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் இயற்கையாகவே 'கொலஸ்ட்ரால்' இல்லை. ஆனால் சில எண்ணெய்
நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில் தங்களது தயாரிப்பில் 'கொலஸ்ட்ரால்' இல்லை என வாசகத்தை அச்சிட்டு வருகின்றன. இந்த விளம்பரத்தால் நுகர்வோர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். உணவு பாதுகாப்புச் சட்டப்படி, 'எண்ணெய்யின் இயற்கை குணாதிசயத்தை பாக்கெட்டில் குறிப்பிட தேவையில்லை, செயற்கையாக சேர்க்கப் படும் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றத்தை மட்டும் குறிப்பிட்டால் போதும்,' என கூறப்பட்டுள்ளது.ஆனால் தாவர எண்ணெய்யின் இயற்கை குணாதிசயமான 'கொலஸ்ட்ரால்' இல்லாததை, தங்களது
தயாரிப்புகளுக்கே உரித்தானது போல் விளம்பரப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் தாவர எண்ணெய் பாக்கெட் களில் 'கொலஸ்ட்ரால் இல்லை' என்ற வாசகம் இருந்தால், அவற்றை பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் எண்ணெய்களில் மட்டுமே 'கொலஸ்ட்ரால்' இருக்கும். மேலும் தாவர எண்ணெய்களில் செயற்கையால் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை வேண்டுமானால் குறிப்பிடலாம். இயற்கையிலேயே உள்ள அதன் குணாதிசயத்தை பிரபலப்படுத்தி வியாபாரம் செய்ய கூடாது, என்றார்.சிவகங்கை: சமையல் எண்ணெய் பாக்கெட்களில் 'கொலஸ்ட்ரால் இல்லை'என்ற வாசகம் எழுதுவதற்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. கடலை, சூரியகாந்தி, தேங்காய், எள் போன்ற தாவரங்களில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் இயற்கையாகவே 'கொலஸ்ட்ரால்' இல்லை. ஆனால் சில எண்ணெய் நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில் தங்களது தயாரிப்பில் 'கொலஸ்ட்ரால்' இல்லை என வாசகத்தை அச்சிட்டு வருகின்றன. இந்த விளம்பரத்தால் நுகர்வோர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். உணவு பாதுகாப்புச் சட்டப்படி, 'எண்ணெய்யின் இயற்கை குணாதிசயத்தை பாக்கெட்டில் குறிப்பிட தேவையில்லை, செயற்கையாக சேர்க்கப் படும் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றத்தை மட்டும் குறிப்பிட்டால் போதும்,' என கூறப்பட்டுள்ளது.ஆனால் தாவர எண்ணெய்யின் இயற்கை குணாதிசயமான 'கொலஸ்ட்ரால்' இல்லாததை, தங்களது தயாரிப்புகளுக்கே உரித்தானது போல் விளம்பரப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் தாவர எண்ணெய் பாக்கெட் களில் 'கொலஸ்ட்ரால் இல்லை' என்ற வாசகம் இருந்தால், அவற்றை பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் எண்ணெய்களில் மட்டுமே 'கொலஸ்ட்ரால்' இருக்கும். மேலும் தாவர எண்ணெய்களில் செயற்கையால் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை வேண்டுமானால் குறிப்பிடலாம். இயற்கையிலேயே உள்ள அதன் குணாதிசயத்தை பிரபலப்படுத்தி வியாபாரம் செய்ய கூடாது, என்றார்.
No comments:
Post a Comment