காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே முதலிப்பட்டியில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலைக்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சீல் வைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டியில், ஒரு மாந்தோப்பு அருகே, தடை செய்யப்பட்ட குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தாவுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், நாகராஜன், குமார் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று அவர் சோதனை நடத்தினார். இதில், எம்.வி.எம்., என்ற பெயரில் குட்கா தயாரித்து, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும், இங்கு தயாரிக்கப்பட்ட குட்கா பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வில் நிக்கோடின் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தால், இதன் உரிமையாளர் மீது, போலீசில் புகார் செய்யப்படும் என்றனர். சீல் வைக்கப்பட்டுள்ள குட்கா ஆலை, அனுமதியின்றி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment