பழநி,:தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தரமில்லாத உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி கோயிலுக்கு மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, கரூர், தாராபுரம்,கோவை உட்பட வெளியூர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதன்
காரணமாக ரோட்டோரங்களில் திடீர் ஓட்டல், டீ மற்றும் ஜூஸ் கடைகள் துவக்கப்பட்டுள்ளன.பல கடைகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி பலகாரங்கள் தயார் செய்கின்றன. விற்காத முதல்நாள் உணவு பொருட்களை சுட வைத்து பக்தர்களிடம் விற்கின்றனர். மலைக்கோயில் கிரிவீதிகள், இடும்பன் கோயில் ரோடு, பூங்கா ரோடு, அய்யம்புள்ளி ரோடு
களிலும் தற்காலிக உணப்பொருள் விற்பனை கடைகள் அதிகரித்துஉள்ளன.விலை உயர்வுபாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பால், உணவு பொருட்களின் விலையும் கணிசமாக
உயர்ந்துள்ளது. டீ ரூ.10, இட்லி ரூ.10, தோசை ரூ.30, சாப்பாடு ரூ.50 முதல் ரூ.110 வரை ஓட்டல்களின் ஆடம்பரத்திற்கு ஏற்ப விற்கின்றனர். இதன்காரணமாக குடும்பத்துடன் வரும் நடுத்தர, ஏழைமக்கள் தள்ளுவண்டி, தரைக்கடைகளில் தரமில்லாத
உணவு பொருட்களை உண்ணும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.பழநியில் உணவு பொருட்களை சோதனை செய்து, முறைகேடான விற்பனையாளர் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment