நம் நாட்டின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு, உறுதியாக்கப்பட வேண்டும் என்று, சீன கலப்பட அரிசிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த வழக்கறிஞர் சுக்ரீவா துபே கூறியுள்ளார்.
குடிநீர், உணவுப் பொருட்கள், தாவரங்கள் போன்றவற்றின் பாது காப்பு தொடர்பாக கடந்த 25 ஆண்டு களாக 500-க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை இவர் தொடர்ந் துள்ளார். 74 வயதான சுக்ரீவா துபே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர். உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து ‘தி இந்து’வின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய் யப்படும் அரிசியில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாக நீங்கள் கண்டு பிடித்தது எப்படி?
ஆந்திராவில் இருந்து என்னை சந்திக்க வந்த எங்கள் கட்சியை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் பேச்சுவாக்கில் இதை என்னிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி யடைந்த நான் மேலும் விசாரித் தேன். இதில் உருளை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு 60 சதவீதமும் பிளாஸ்டிக் (கண்களுக்கு அழகாக தெரியும் வகையில் உருவம் கொடுக்க) 40 சதவீதமும் கலந்து போலி அரிசி தயாரிக்கப்படுவது தெரியவந்தது. தைவானுக்கு அருகிலுள்ள சோன்ஜி மாவட்டத் தில் இந்த போலி அரிசி தயாரிக்கப் படுவதாகவும், இங்கு சீனர்கள் தவிர வெளிநாட்டினர் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
நீங்கள் கூறுவதை பார்த்தால் அது அரிசியே இல்லை என்று தெரிகிறது. இதை மக்கள் கண்டுபிடிக்க முடியாதா?
உணவுப் பரிசோதனைக் கூடங் களால் மட்டுமே இதை கண்டு பிடிக்க முடியும். ஏனெனில், தனி யாக இறக்குமதி செய்யப்படுவதை அப்படியே விற்பனை செய்யாமல், அதிக விலை கொண்ட உயர்ரக அரிசியில் கலந்து விற்கப்படுகிறது. இது, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் அதிலும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிகமாக கலப்படம் செய்து விற்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைக்கச் செய்வது அரசின் கடமை. இதை உண்பவர் கள் மெல்ல, மெல்ல புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
பருப்பு வகைகளிலும் கலப்படம் இருப்பதாக கூறுகிறீர்களே?
இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் மீது நான் கடந்த 2009 ஏப்ரலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தேன். இதைத் தொடர்ந்து டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கலப்பட பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், அதன் மீது முறையான நடவடிக்கை இல்லாததால் மீண்டும் தொடர்கிறது. இவற்றை கண்களை கவரும் வகையில் பாலிஷ் செய்து விற்பதன் ரகசியமே கலப்படம் தான். இத்துடன் கால் நடைகள் உணவுக்காக பயிர் செய் யப்படும் ஒருவகை பருப்பு வகை களை இத்துடன் கலந்து விடுகிறார் கள். இது சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சீனாவில் மட்டும் இவ்வாறு விற்பனை செய்யப்படுவதில்லை. பிற நாட்டினரை இவர்கள் மனிதர்களாக நினைப்பதில்லை.
இந்த பட்டியலில் பழங்களையும் சேர்த்துள்ளீர்களே?
காய்கள் தானாகப் பழுக்கும் வரை நமது வியாபாரிகளுக்கு பொறுமை இல்லை. டெல்லியின் ஆசாத்பூர் மண்டி அருகே உள்ள கிராமத்தில் ஓர் ஆபத்தான ரசா யனத்தை நீரில் கலக்கிறார்கள். இதில் வாழையை மூழ்கி எடுத்தால் ஒரே இரவில் பழுத்து விடும். அதன் முனைகளில் உள்ள லேசான கருப்பு காயம் இதற்கு சாட்சி. ஒரே வண்டியில் ஏற்றப்படும் மாம்பழங் கள் அனைத்தும் ஒரேவித நிறத்தில் பழுத்துக் காணப்படுவதும் ரசாயனத்தின் தாக்கமே.
வேறு எந்த உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளது என எண்ணுகிறீர்கள்?
மிளகில், பப்பாளியின் விதை களை கலர் செய்து கலக்கின்றனர். சுத்தமான கடுகு எண்ணெய் 10 சதவீதம் கூட கிடையாது.
மிளகாய், மஞ்சள், தனியா தூள் களில் செங்கற்களை நைசாக அரைத்து நிறம் மாற்றி கலக்கப் படுகிறது. கோவா மற்றும் பன்னீரி லும் கலப்படம் தான். சாதாரண நாட்களில் ஒரு 5 டன் சப்ளையாகும் இவை விழாக் காலங்களில் மட்டும் 50 டன் அளவுக்கு கிடைப்பது எப்படி?
உபயோகப்படுத்தப்பட்ட டீ தூளை டெல்லியின் குப்பைகளில் காண முடியாது. காரணம் அது மீண்டும் நிறம் ஏற்றப்பட்டு சந்தைக்கு வந்து விடுகிறது. இதற் காக, பழைய டீ தூள் காசு கொடுத்து வாங்கப்படுகிறது. காபியில் இது முடியாது என்பதால் இதை அதிகமாகப் பயன்படுத்தும் தென்னிந்தியர்கள் தப்பியுள்ளனர். தங்கத்தை கூட கலப்படக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. இவற்றின் தரம் 22 காரட் தான் என எளிதாக அளவிடும் கருவிகள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கத் தொடங்கினால் உண்மை வெளி யாகி பெரும்பாலானவர்கள் பிடி படுவார்கள். இந்த அத்தனை பிரச்சினைகள் மீதும் தேசிய அள வில் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளேன்.
நம் நாட்டில் கலப்படங்கள் மீதான சோதனை எந்த அளவில் உள்ளது?
டெல்லியில் சோதனை நடத்த என் போன்றவர்கள் உயர் நீதி மன்றத்தில் மனு செய்யவேண்டிய நிலைதான் உள்ளது. இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு கிடைக் கிறதே தவிர தீர்வு இல்லை. கலப் படப் பொருட்கள் பிடிபட்ட பிறகும் அவை உடனடியாக பரி சோதனைக் கூடங்களுக்கு அனுப் பப்படுவதில்லை.அதற்குள் கைப் பற்றப்பட்ட பொருட்கள் மாற்றப் பட்டு விடுகின்றன. இதற்கு சாதக மான வகையில் நம் நாட்டில் மிக, மிக குறைந்த எண்ணிக்கையில்தான் பரிசோதனைக் கூடங்கள் உள்ளன.
இதற்காக நீங்கள் அரசுக்கு கூறும் ஆலோசனை என்ன?
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய பரிசோதனைக் கூடங்கள் குறைந்தது மூன்று அமைக்க வேண்டும். கலப்படத்தில் பிடிபடும் பொருட்கள் அதே இடத்தில் சோதனை செய்யப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை தற்போது 6 மாதங்கள் தான். இதை 7 ஆண்டுகளாக்குவது உட்பட பல்வேறு மாற்றங்களுடன் அச்சட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கலப்பட ஆபத்தில் இருந்து பொதுமக்கள் உடனடியாக தப்பிக்க என்ன வழி?
பளபளக்கும் அரிசி, பருப்பு வகைகளை உண்பதை நிறுத்த வேண்டும். பாலீஷ் செய்யப்படாத பொருட்களை கேட்டு வாங்கவேண்டும். காய்கறிகளை சுடுநீரில் கொதிக்க வைத்த பின் சமைக்க வேண்டும். இதனால் இதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் ஓரளவு விலகிவிடும். கலப்படம் குறித்து தெரிந்தால் புகார் செய்ய தைரியமாக முன்வர வேண்டும். நான் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததால் தான் இன்று தமிழகம் போன்ற சில மாநிலங்களில் மழைநீர் சேமிப்பு ஓரளவு கடைப்பிடிக்கப்படுகிறது.
மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து?
நகர மக்களின் உணவு என்பதால் இதில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழைகளின் உணவு என்றால் அக்கறை செலுத்தப்பட்டிருக்காது. நம் நாட்டில் உண்மையான கறுப்பு பணம் இந்த கலப்படக்காரர்களிடம் தான் உள்ளது. இவற்றில் ஒரு பங்கு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகி விடுவதால் அவற்றில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் இப்பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்துவதில்லை.
No comments:
Post a Comment