சேலம்:சேலம் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட ஃப்ரஞ்ச் ஃப்ரை உருளைக்கிழங்கு சிப்ஸில், துர்நாற்றம் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ். இவர், சென்னையில் இருந்து விடுமுறைக்காக சேலம் வந்தார். அவர், நேற்று காலை, 11.15 மணி அளவில், அப்பகுதியில் உள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில், ஃப்ரஞ்ச் ஃப்ரை உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி உள்ளார்.மதியம் சிப்ஸ் பாக்கெட்டுக்களை திறந்து பார்த்த போது, அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவிடம் புகார் அளித்தார்.
ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வு நடத்திய அனுராதா, ஃப்ரஞ்ச் ஃப்ரை உள்ளிட்ட பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றார். மேலும், புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.இதுகுறித்து, டாக்டர் அனுராதா கூறியதாவது:தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட ஃப்ரஞ்ச் ஃப்ரையில், துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்தது. காலையில் பொருள் வாங்கப்பட்ட நிலையில், மதியம் தான் புகார் வந்தது. இருப்பினும், புகார் குறித்து விசாரணை நடக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவத்தினர் விளக்கம் அளிக்க, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment