ஆத்தூர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில், ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியை எம்.தில்லைக்கரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்க இயக்குநர்கள் மூத்த வழக்குரைஞர்கள் ஏ.வடிவேல், ஆர்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் டி.அனுராதா கலந்து கொண்டு, மாணவிகளுக்கு கருத்துக்களை வழங்கினார்.
ரசாயன கலப்படம் செய்த உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்றும், பொருள்கள் வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த இரண்டு மாணவிகளுக்கு ஜெயபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஜெயஆனந்த் பரிசுகள் வழங்கினார்.
No comments:
Post a Comment