May 28, 2015

பான்மசாலா, குட்காவுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு


தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை மற்றும் நிகோடின் சேர்ந்த பொருட்களை தயாரிக்கவும் விற்கவும் விதிக்கப்பட்ட தடை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய விதிகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் சேர்க்கப்பட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் அது மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் இந்தப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குட்கா , பான்மசாலா மற்றும் புகையிலை, நிகோடின் சேர்க்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் விற்க, தேக்கி வைக்க, தயாரிக்க, வினியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, கடந்த 23-ம் தேதியில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment