புதுடில்லி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் வாயிலும் எச்சிலை ஊற வைக்கும், ருசி மிகுந்த, 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவில், எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' எனப்படும், அமினோ ஆசிட் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் விற்பனைக்கு விடப்பட்டிருந்த, மேகி பாக்கெட்டுகளை, அம்மாநில உணவு தர பரிசோதனை அதிகாரி, சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அதில், அனுமதிக்கப்பட்ட, 0.01 பி.பி.எம்., அளவுக்கு மேலே, 17 பி.பி.எம்., அளவில், எம்.எஸ்.ஜி., உள்ளது கண்டறியப்பட்டதால், டில்லியில் உள்ள தர நிர்ணய அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவுக்கு ருசி, மணத்தை அதிகரிக்கும் இந்த ரசாயனப் பொருள், சீன உணவு வகைகளில் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இந்திய உணவு வகைகளில் சமீப காலமாக இந்த ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஆனால், மேகி நூடுல்ஸ் உணவு பண்டத்தை தயாரிக்கும், பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே', தாங்கள் ஒருபோதும், மேகி நூடுல்ஸ் பண்டத்தில், எம்.எஸ்.ஜி.,யை சேர்ப்பதில்லை என, திட்டவட்டமாக கூறுகிறது.
No comments:
Post a Comment