Feb 11, 2015

ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் ரெய்டு தரமற்ற பொருட்கள் பறிமுதல்


 
சேலம், பிப். 11&
சேலம் அரசு மருத்துவமனையின் உள்ளேயும், வெளியேயும் உள்ள ஓட்டல்கள், கடைகளில் இன்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலை மையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாலு, ஜெகன்நாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டல்களில் இருந்த புளித்த மாவு, அழுகிய கேரட், பிளாஸ்டிக் டீ கப், பைகள் உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அனுராதா கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனையின் வெளியே உள்ள 6 கடைகளிலும், உள்ளே உள்ள 2 கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட் கள் விற்பனை செய்து வருவதாக அரசு மருத்துவமனை முதல்வர் மோகன் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இங்குள்ள கடைகளில் ஆய்வு செய் தோம். கடைக ளில் பிளாஸ் டிக் பேரலில் சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் டெங்கு உற்பத்தி செய்யும் லார்வாக்கள் இருந்தது தெரிந்தது.
இதனால் அந்த தண்ணீரை அதிகாரிகள் ரோட்டில் ஊற்றினர். மேலும் அந்த கடைகளில் புளித்த மாவு, அழுகிய நிலை யில் இருந்த 4 கிலோ கேரட் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுப்படிக்கப்பட்டு அதை அகற்றினோம். அந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அழுகிய நிலையில் இருக்கும் உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது போன்றவை அறிவுறுத்தப்பட்டன. விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடை உரிமையா ளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment