பெரம்பலூர், டிச,9:
பல்வேறு நாடுகளில் பறவை இனங்களில் கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தி வரும் பறவை காய்ச்சல் நோய் தற் போது கேரள மாநிலத்தில் வாத்துகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் கிருமிகளால் உண்டாகும் இந்நோய் பறவைகள் மற்றும் கோழி இனங்களில் கடுமையான பாதிப்பையும் இறப்பினையும் ஏற்படுத்தக் கூடி யது. மேலும் இந்நோய் பறவை மற்றும் கோழிகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவி ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியதாகும்.
தற்போது இந்நோய் தமிழகத்தில் இல்லை என்றாலும் அண்டை மாநிலமான கேரளாவில் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் தரேஸ்அஹமது உத்தரவின்பேரில், பறவைக்காய்ச்சல் நோய்குறித்து 4 வட்டாரங்களிலும் தலா 8 பேர் என மொத்தம் 32 பேர்களைக் கொண்ட தீவிர கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு நோய்கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதன்படி, பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ், கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சந்திரசேகரன், தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட மாவட்ட ஒருங்கிணைப் பாளர் டாக்டர் அரவிந்தன், கால்நடைத்துறை சிறப்பறிஞர் மோகன் ஆகியோர் ரோவர் வளைவுப் பகுதியில், நாமக்கல்லில் இருந்து நேரடியாக கறிக்கோழி கொள்முதல் செய்திடும் மொத்த விற்பனையாள ரான ஒருவரது கடையில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தெரிவித்ததாவது : தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இன்றும் கண்டறியப்படவில்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவை யில்லை. பொதுமக்கள் கறிக் கோழிகளையும் வேக வைத்து சாப்பிட்டால் எந்தப் பாதிப்பும் வராது.
பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி பகுதியில் உள்ள முட்டை உற்பத்தி செய்யும் 8 கோழிப்பண்ணைகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. இதர 140 கறிக்கோழி கடைகளும் கால்நடை மருத்துவர்களால் தொடர் சோதனையில் உள்ளது. எங்காவது 50க்கும் மேற்பட்ட கோழிகள் மொத்தமாக இறப்பது தெரிய வந்தால், அந்தக் கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஆய்வில் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறியாக பாசிட்டிவ் ரிசல்ட் இருந்தால், அங்கிருந்து கலெக்டருக்கு நேரடியாக தகவல் அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட கோழிகள் கலெக்டர் உத்தரவுப்படி மொத்தமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment