Nov 18, 2014

குடிதண்ணீர் பாட்டிலில் எட்டுக்கால் பூச்சி நாகர்கோவிலில் திருமண வீட்டில் அதிர்ச்சி



நாகர்கோவில், நவ.18:
நாகர்கோவிலில் மூடிய தண்ணீர் பாட்டிலில் எட்டுக்கால் பூச்சி கிடந்ததால் திருமண வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர்.
திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் தற்போது உணவுகள் தாயாரி ப்பை விட மெஸ்களில் ஆர்டர் செய்து சப்ளையர்கள் பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்கள் மூலம் பரிமாறுவது வாடிக்கையாகிவிட்டது. இதில் சிறிய பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதே போல் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள திருமண வீட்டில் விருந்து பரிமாறப்பட்டது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த நிறுவனத்தின் 300 மில்லி அளவு கொண்ட குடிநீர் பாட்டில் கள் வழங்கப்பட்டன.
இதில் ஒரு தண்ணீர் பாட்டிலில் எட்டுக்கால் பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் பாட்டில் வைக்கப்பட்ட உறவினர் அதிர்ச்சி யில் கத்தியுள்ளார். இதில் அவர் நீண்ட நாட்களாக மன வருத்தத் தில் இருந்துவிட்டு அப்போது தான் திருமணத்திற்கு வந்திருந்தாராம். பின்னர் அவரை சமாதானப்படுத்திய திருமண வீட்டினர். இதுகுறித்து தங்களது வழக்கறிஞர் மூலம் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறுகையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என நம்பித் தான் இதனை வாங்கி அருந்துகின்றோம். ஆனால் இந்த தண்ணீரிலும் சுத்தமின்றி காணப் படுவது அதிர்ச்சியளிக்கிறது.
இதே நிறுவனத்தின் 20 லிட்டர் தண்ணீர் கேன்களையும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தற்போதைய சம்பவத்திற்கு பின்னர் இந்த தண்ணீரை குடிக்க அருவருப்பும், தயக்கமும் ஏற்பட்டுள்ளது. பெரும் பாலும் பாக்கெட் மற்றும் பாட்டில் தண்ணீர் கள் சுத்தமின்றி வருவதால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதே நல்லது. மேற்கண்ட தண்ணீர் நிறுவனம் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆலம் கலந்த தண்ணீர்
கன்னியாகுமரி பகுதியில் உள்ள பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் தண்ணீரில் ஆலம் என்கிற ரசாயனத்தை கலக்கிறது. இதனை கலந்த உடன் கலங்கிய தண்ணீர் தெளிவாகிவிடும். பின்னர் அதனை சரியாக சுத்தம் செய்யாத கேன்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
* 20 லிட்டர் கேன்களை 50 தடவை மட்டுமே பயன்படுத்தலாம் என மாசுக்கட்டுபாடு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தண்ணீர்கேன்கள் 100க்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு பொழிவிழந்து, உருவிழந்து மேடு பள்ளங்களுடன் அழுக்கும் பழுப்பும் கலந்த நிறமாக காணப்படுகின்றன.
* பெரும்பாலும் 20 லிட்டர் கேன்களை பணியாளர்கள் மூலம் பெயரளவிற்கு கழுவி விட்டு பின்னர் மீண்டும் தண்ணீரை அடைப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் பாக்கெட் வாட்டர் நிலைமை மிகவும் மோசம்.
* உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோன்ற நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் எப்போதாவது சில கடைகளில் மட்டும் பெயரள விற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதால் தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

No comments:

Post a Comment