பரமத்திவேலூர், நவ.19:
இனிவரும் காலங்களில் வெல்லம் உற்பத்தியில் சர்க்கரை(அஸ்கா) மற்றும் ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2011ன்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படுமென விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வெல்ல உற்பத்தியாளர்களு க்கான விழிப்புணர்வு கூட் டம் கொளக்காட்டுப்புத்தூரில் நடைபெற்றது. மாவ ட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் இந்த 2ம் கட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சர்க்கரை(அஸ்கா) மற்றும் ரசாயன பொருட்கள் போன்றவற்றை கலக்காமல் தரமான வெல்லத்தை தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே, விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு உற்பத்தி ஆலை கொட்டகைகளில் மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில் 25 வெல்ல உணவு மாதிரிகள் தரமற்றது என அறிக்கை பெறப்பட்டு, தரமற்ற வெல் லம் உற்பத்தி செய்த உற்பத்தியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்றவர்கள் உடனடியாக விளக் கம் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் வெல்லம் உற்பத்தியில் சர்க் கரை(அஸ்கா) மற்றும் ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2011ன்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசண்முகம், இளங்கோவன், சிவநேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட வெல்ல உற்பத்தியாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற உற்பத்தியாளர்கள். உள்படம்: கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் பேசினார்.
No comments:
Post a Comment