திருச்சி, நவ. 19:
அக்மார்க் முத்திரையிட்ட உணவு பொருட் களை பயன்படுத்த நுகர்வோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. இந்த கலப்படத்தால் ஏற்படும் விளைவுகளான புற்றுநோய் மூலை யின் பணி முடக்கம், கண் குரு டாதல், இதயநோய், வாதநோய் மற்றும் கருச்சிதைவு போன்றவற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றி தரமான கலப்படமற்ற வேளாண்மை விளைபொருட்களை வழங்குவதற்காக வேளாண் விளைபொருள் தரம் பிரித்தலும் மற்றும் குறியிடுத லும் சட்டம் 1937ம் ஆண்டு இயற்றப்பட்டது. நுகர்வோர் உபயோகப்படுத்தும் உணவு பண்டங்களுக்கு உத்தரவாதம் கொடுத்து பொதுமக்களின் பணத்துக்கு சமமான பயனுள்ள பொருளை வழங்குவது அக்மார்க் திட்டத்தின் நோக்க மாகும். அக்மார்க் என்பது அக் ரிக் கல்சுரல் மார்க்கிங் என்பதா கும். இந்த திட்டம் மத்திய அர சால் மாநில அரசு, வேளாண்மை விற்பனைத்துறையின் தொழில்நுட்ப உதவியோடு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் சென்னை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநரகத்தின்கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகி றது. திருச்சி மாவட்டத்தில் 2 மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வுக்கூடங்கள் மன்னார்புரத்தில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், ஆய்வுக்கூடங்களில் விற்பனை மையங்கள் மூலம் உணவு பொருட்கள் அக்மார்க் முறையில் தரம் பிரிக்கப்பட்டு முத்திரை பதிந்த தரச்சான்றுடன் பொதுமக்களுக்கு கிடைக்க பெற்று வருகிறது. அக்மார்க் உணவு பொருட்கள் தரமானது, கலப்படமற்றது.அக்மார்க் தரம் பிரிக்கப்படும் உணவுப்பொருட்களில் எண்ணெய் வகைகள், மசாலாபொடி வகைகள் மற்றும் தேன், கடலை மாவு, கோதுமை மாவு, ரவை, மைதா, ஜவ்வரிசி, கூட்டு பெருங்காயம், எள், புண் ணாக்கு, பதப்படுத்தப்பட்ட தேங்காய்பொடி உள்ளிட்டவை இடம்பெறுவதால் இவற்றில் அக்மார்க் முத்திரையிடப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து நுகர்வோர் வாங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment