Nov 20, 2014

ராணிப்பேட்டை, வாலாஜாவில் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்


ராணிப்பேட்டை, நவ. 20:
ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில், வாலாஜா ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், பல்வேறு ஒன்றிய அளவிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரபு, ஜெயராமன், செந்தில், பாஸ்கரன், மணிமாறன், தேவராஜன், கவுரிசுந்தர், ராஜேஷ் உள்ளிட்டடோர் ராணிப்பேட்டை, முத்துக்கடை மற்றும் வாலாஜா பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஓட்டல்கள், பங்க் கடைகள், மளிகைகடைகள், ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், டீ கடைகள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் காலாவதி ஆன உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட், பீடி, குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை (மதிப்பு ரூ. 10 அயிரம்) பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளின் திடீர் சோதனையால் பஜார் பகுதியில் பரபரப்பாக ஏற்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment