மேட்டூர், அக்.16:
சேலம் மாவட்டம், மேட்டூரில் ஸ்வீட் கடைகள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படும் திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா நேற்று அதிரடி சோதனை நடத்தினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஸ்வீட் கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்புகளின் தரம், பேக்கிங் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து, திருமண மண்டபங்களில் தயார் செய்யப்படும் பலகாரங்களின் தரம், பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவற்றை ஆய்வு செய்து, இனிப்புகளை தயாரித்து பேப்பர்களில் வைக்க கூடாது என எச்சரித்தார்.
பலகாரங்களின் நிறம் கூடுவதற்காக, வண்ணப்பொடிகள் சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சுகாதாரமற்ற முறையில் பண்டங்கள் தயாரித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது, மேட்டூர் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மாரியப்பன், இளங்கோவன், சிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment