Oct 16, 2014

கலப்பட எண்ணெயில் தயாரிக்கப்பட்டதா புதுவை ஸ்வீட்ஸ் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுச்சேரி, அக். 16:
கலப்பட எண்ணெயில் இனிப்புகள் தயாரித்து விற்கப்படுகிறதா? என புதுவை ஸ்வீட்ஸ் கடைகளில் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
தீபாவளியை முன் னிட்டு ஸ்வீட்ஸ் கடை களில் இனிப்பு வகைகள் அதிகளவில் விற்பனை யாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சில கடைகளில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காலாவதியான பொருட் கள், கலப்பட மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மூலம் இனிப்பு வகைகள் செய்து விற்கப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதி காரி தனராஜ் தலைமையில் ஊழியர்கள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
பாரதி வீதி, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடைகளில் இச்சோதனையை மேற்கொண்டனர். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைகளை மீண்டும் பயன்படுத்தி இனிப்பு வகைகளையோ, தின்பண்டங்களையோ தயாரித்து விற்கக் கூடாது, எந்த எண்ணெய் பயன்படுத்தி இனிப்புகள், தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற விவரத்தை வாடிக்கையாளர்கள் அறியுமாறு எழுதி வைக்க வும் அறிவுறுத்தினர்.
மேலும், ஸ்வீட்ஸ் கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளை ஆய்வக சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
பெட்ரோலியம் ஈதர் இயந்திரம் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அது எந்த எண்ணெயில் செய்யப்பட்டது, கலப்படமா போன்றவற்றை அறிய முடியும். இதுபற்றி அதி காரி தனராஜ் கூறும்போது, இனிப்பு வகைகள் பாமா யில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், நெய் ஆகியவனவற்றில் எதில் தயாரிக்கப்பட்டது என தெளிவாக வாடிக்கையாளர்கள் அறியும் வகை யில் எழுதி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அதிக விலை கொடுத்து வாங்குவது தவிர்க்கப்படும். சூரியகாந்தி எண்ணை யில் செய்யப்பட்டதை நெய்யில் தயாரிக்கப்பட்டது என கூறி விற்பது உணவு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். பொதுமக்கள் குறைந்த விலையில் விற்கப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் அறிந்து கவனமாக வாங்க வேண்டும். தாங்கள் வாங்கும் இனிப்பு பண்டங்கள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 94435&36146 என்ற எண் ணில் தொடர்பு கொள்ள லாம், அல்லது எஸ்எம்எஸ் அனுப்பலாம் என்றார்.


No comments:

Post a Comment