ஓமலூர், அக். 17:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி யில் கரும்பு தயாரிப்பு ஆலை களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய் தனர். விதிமுறைகளை மீறி வெல்லத்தில் உரம், சர்க்கரையை பயன்படுத்திய 4 ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூருக்கு உட்பட்ட காமலாபுரம், பொட்டியபுரம், கருப் பூர், தின்னபட்டி, வட்டகாடு, தேக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் வெல்லம் தயாரிக் கும் கரும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சர்க்கரையை கொண்டு வெல்லம் தயாரிப்பதாகவும், மேலும், உணவு பொருட்களில் கலக்கக்கூடாத பல்வேறு மூலப்பொருட்கள் கலப்பதாகவும் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத் தது. இதன்பேரில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓமலூர் வட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வுகள் செய்தனர். இந்த ஆய்வில் வெல்லம் வெண்மை நிற மாக வருவதற்கு, வயலுக்கு பயன்படுத்தப்படும் சூப்பர் பாஸ்பேட் உரம், சப்போ லைட் போன்றவற்றை பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. மேலும், பாதியளவு கரும்பு சாரில் பாதி அளவு சர்க்கரையை பயன்படுத்தி யது ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வெல்லம் தயாரித்த 4 கரும்பாலைகளுக்கு தடை விதித்து சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஆலைகளில் வைக்கபட்டிருந்த சூப்பர் பாஸ்பேட், சபோலைட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆலைகளில் விதிமீறல்கள் கண்டுபிடித்து முதல் கட்ட மாக எச்சரிக்கை நோ ட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment