செங்கல்பட்டு, செப்.25:
மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் வந்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில் நகர மன்ற தலைவர் கோபிகண்ணன், நகராட்சி ஆணையர் மனோகரன், துப்புரவு ஆய்வாளர் புகழேந்தி உள்பட நகராட்சி ஊழியர்கள் மறைமலை நகராட்சியில் உள்ள எம்ஜிஆர் சாலை, பவேந்தர் சாலை, பாரதியார் சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி, நகராட்சி குடோனில் வைத்தனர்.
மதுராந்தகம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் உதவி பொறியாளர் ரங்கசாமி, செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட மாசு கட்டுப் பாட்டு துறை அலுவலர்கள் மதுராந்தகம் நகரின் கடைகளில் அதிக மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் கவர், கப் போன்றவை பயன்படுத்துவதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை, தேரடி தெரு, ஆஸ்பிட்டல் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள் களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கண்ட அதிகாரிகளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உள்பட சுகாதார துறை அலுவலர்கள் கடைகளில் பயன்படுத்திய 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் கருங்குழி பேரூராட்சியில் பஜார் வீதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தையும் சிறு சிறு துணுக்குகளாக மெஷின் மூலம் நறுக்கப்பட்டு அவற்றை சாலையமைக்க பயன்படுத்துவோம்.
வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை தொடரும் என உதவி பொறியாளர் ரங்கசாமி தெரிவித்தார்.
திருப்போரூர் பகுதி வணிக நிறுவனங்களில் நேற்று மாசு கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment