Sep 25, 2014

பறிமுதல் செய்யப்பட்ட 8.5 கிலோ குட்கா அழிப்பு


பள்ளிபாளையம், செப்.25:
நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய 8.5 கிலோ குட் காவும், 20 கிலோ புகை யிலை பொருள் களையும் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் நேற்று சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பொருள்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நகராட்சி ஆனை யாளர் மகேஸ்வரி தலை மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோத னை பஸ்நிலையம், ஒட்டமெத்தை, திருச்செங்கோடு சாலை பகுதி யில் உள்ள ஓட்டல்கள், தேநீர் கடை கள், மளிகை கடைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 133 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகள், 8.5 கிலோ பான் மசாலா, குட்கா, 20 கிலோ புகையிலை பொ ருள்கள் கைப்பற்றப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 5 விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment