திருப்போரூர், ஆக.6:
கேளம்பாக்கம் பகுதியில் தரமற்ற டீத்தூள், குட்கா போன்ற பொருட்கள் 20 ஆயிரம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்நாதன் மேற்பார்வையில் கேளம்பாக்கத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட சாலையோர உணவகங்கள், டீக்கடைகள், மளிகைக்கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
திருப்போரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சித்தாமூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சுகானந்தம் ஆகியோர் நடத்திய சோதனையில், டீக்கடைகளில் தரமற்ற டீத்தூள் பயன்படுத்தப்படுவதும், உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் சப்ளை செய்யப்படுவதும், மளிகைக்கடைகளில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தொடர்ந்து 30க்கு மேற்பட்ட கடைகளில் இருந்து தரமற்ற டீத்தூள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பான்பராக் குட்கா உள்பட 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டன.
No comments:
Post a Comment