Jun 30, 2014

சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை வயிற்றுப்போக்கு பரவும் அபாயம்


சிவகங்கை, ஜூன் 29:
சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் உள்ளிட்ட கலப்பட பதநீர் விற்பனை செய்யப்படுவதால் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலங்களில் குளிர் பானம், பழ ஜூஸ், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றின் விற்னை அதிகரிக்க தொடங்கிவிடும். வெயில் சூட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் மேற்கண்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
சிவகங்கை பகுதியில் பனை மரங்கள் அதிகம் என்பதால் ஊருக்கு வெளியே சாலையின் இரு புறங்களிலும் நுங்கு விற்பனை நடந்து வருகிறது. வாகனங்களில் வைத்து நகர்ப்பகுதிக்குள் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான பானம், உடல் சூட்டை தணிக்கும் என்ற நம்பிக்கையில் பதநீரை வாங்கி குடிக்கின்றனர்.
ஆனால் சிலர் இருக்கின்ற பதனீரை கூடுதலாக்க வேண்டும் என்ற ஆசையில் பதனீரில் சாக்கரீனையும் கலக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே பதநீரை வாங்கி குடிக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கையை சேர்ந்த கண்ணன் கூறுகையில்..முன்பு அதிகமான அளவில் பதநீர் எடுக்கப்படும். தற்போது குறைந்த அளவிலேயே பதநீர் எடுக்கின்றனர். இதனால் பதநீர் பற்றாக்குறையை ஈடுகட்ட கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர். சாக்கரீன் கலந்த பதநீர் தற்போதுள்ள வெயில் சூட்டால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே அதில் கலப்படம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் சோதணை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment