சிதம்பரம், மே 1:
சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் ஆய்வாளர்கள் பத்மநாபன், குணசேகரன் கொண்ட குழுவினர் நேற்று காலை சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற பழச்சாறுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனையிட்டனர்.
சில கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள், தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா, கலர் பவுடர் கலந்த இனிப்புகள், தேதி குறிப்பிடாமலும் ஐஎஸ்ஐ சான்றிதழ் இன்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்த தண்ணீர் பாக்கெட்டுகள், பழச்சாறுகள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment