Apr 8, 2014

பெட்டிக்கடை, பேக்கரியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு


ஜலகண்டாபுரம், ஏப்.6: 
ஜலகண்டாபுரம் பஸ்நிலையத் தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற் கொண்டு பொது இடங்களில் புகைபிடித்த நபர்கள் மற்றும் புகை பிடிக்க ஊக்குவித்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். 
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார் உத்தரவின் பேரில் பஸ் நிலைய கடைகளில் சோ தனை மேற்கொள்ளப்பட் டது. நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் தலைமை யில் நங்கவள்ளி வட்டார மருத்துவ அலு வலர் நித்யா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ஆயிரம், சக்ரவர்த்தி, பால்ராஜ், ராஜன் ஆகியோர் ஜலகண்டாபுரம் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 
ஆய்வின்போது கடை களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப்பொருட்கள், தயாரிப்பாளர் முகவரி மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி இல்லாத உணவுப்பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் புகைபிடித்த நபர்கள் மற்றும் புகை பிடிக்க ஊக்குவித்த கடைக்காரர்கள் ஆகியோருக்கு மொத்தம் 
ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். மேலும் தரமில்லாத உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடைக்காரர் களை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் காலாவதியான பொருட்களை பயன்படுத்துவோர் பற்றி தக வல் அளிக்கலாம் என்றனர். 
ஜலகண்டாபுரத்தில்

No comments:

Post a Comment