ராமநாதபுரம், பிப். 13:
ராமநாதபுரம் நகரில் ரூ.25 ஆயி ரம் மதிப்புள்ள 70 கிலோ போதை பாக்குகள், பான் மசாலா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு துறை யினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
ராமநாதபுரம் நகர் அர ண்மனை, மீன்கடை பஜார், பழைய பஸ் ஸ்டா ண்ட் உள்ளிட்ட பகுதி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அர சால் தடை செய்யப்பட்ட 70 கிலோ அளவிலான பான் மசாலா, குட்கா, போ தை புகையிலை, போதை பாக்கு உட்பட போதை வஸ்து பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற் றின் மதிப்பு ரூ.25 ஆயிரம். இவற்றை நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் தீயிட்டு அழித்தனர்.
பதிவு செய்வதில் அலட்சியம்:
மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு பொருட்கள் விற் பனை செய்யும் அனைத்து கடைகளும், நிறுவனங்க ளும் பதிவு செய்ய வேண் டும், உரிமம் பெற வேண்டும். அதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்குள் விற்பனை செய்பவர்கள் ரூ.100 செலு த்தி ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். ஆண்டி ற்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்பவர்கள் பதிவு மற்றும் உரிமம் (லை சென்ஸ்) பெற வேண்டும்.
இந்த சட்டத்தின்படி குறிப்பாக வீட்டில் இட்லி சுட்டு விற்பவர்கள் முதல் பெரிய ஓட்டல்கள், தண் ணீர் நிறுவனங்கள், ரேஷன் கடைகள், மாணவர் விடுதி கள், கேன்டீன்கள், சத்து ணவு மையங்கள், அங்கன் வாடி மையங்கள் என உண வுப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசு இதில் கெடுபிடி செய்து வந்தாலும் வியாபாரிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உள்ள வண்ணமே உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வந் தாலும், 2012 ஏப்ரல் முதலே பதிவு மற்றும் உரிமம் பெ றுவது தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 300 உரிமம் உட் பட 14 ஆயிரம் பேர் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை 246 பேர் மட்டு மே உரிமம் எடுத்துள்ளனர். 5 ஆயிரத்து 50 பேர் மட்டு மே பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment