Feb 13, 2014

கடலூரில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி சாவு நெல்லை குளிர்பான குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

நெல்லை, பிப். 13:
கடலூரில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி இறந்ததையடுத்து, நெல்லை யில் உள்ள பிரபல குளிர் பான நிறுவன குடோனில் உணவு பாதுகாப்பு அதி காரிகள் ஆய்வு மேற்கொண் டனர். கடலூரில் விற்கப் பட்ட பேச் எண் கொண்ட குளிர்பானத்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட் டுள்ளது. 
கடலூரில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நிறுவனத்தின் குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள குளிர்பான குடோன்கள் மற் றும் கடைகளில் சோதனை நடத்தி காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டது. மேலும் சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேச் நம்பரில் ஆயிரக்கணக்கில் தயாரான குளிர்பான பாட்டில்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் கடலூர் சிறுமி குடித்த பிர பல நிறுவன குளிர்பானத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நெல்லை மாவட்ட உணவு பாது காப்புத் துறை நியமன அலு வலர் டாக்டர் கருணாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சட்டநாதன், நாகசுப்பிரமணியன், செல்வராஜன், இளநிலை உதவியாளர் சிவசாமி ஆகியோர் நேற்று சோதனை நடத்தினர். சிறுமி குடித்த பேச் எண் கொண்ட குளிர்பானங்கள் தனியாக எடுத்து வைக்கப் பட்டன. மேலும் காலாவதி யான குளிர்பான பாட்டில் கள் உள்ளனவா? என்று அதி காரிகள் ஆய்வு செய் தனர். 
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கருணா கரன் கூறியதாவது: 
கடலூர் சம்பவத்தை யடுத்து தமிழகம் முழுவதும் அதே பேச் எண் கொண்ட குளிர்பானங்கள் விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது. டக்கரம்மாள் புரத்தில் உள்ள குளிர்பான குடோனில் காலாவதியான குளிர்பானங்கள் எதுவும் இல்லை. கடலூர் சிறுமி குடித்த பேச் எண் கொண்ட குளிர்பானங்கள் பிரித்து தனியாக வைக்கப்பட்டுள் ளன. ஆய்வறிக்கை வந்த பிறகுதான் அவற்றை விற்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். 
இதேபோல் கடைகளில் காலவதியான குளிர்பானங் கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
விற்பனைக்கு தடை 
கடலூர் சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேச் எண்ணில் 173 கேஸ் குளிர் பான பெட்டிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 24 குளிர்பான பாட்டில்கள் இருக்கும். இவை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

1 comment:

  1. STOP SALES ORDER on particular batch is welcome. News reports should contain the Manufacturer name , Brand name too in the interest of consumers.

    ReplyDelete