சென்னை, ஜன.9-தமிழ்நாடு முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.இது பற்றி, தமிழ்நாடு கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷேக்ஸ்பியர் கூறியதாவது:-
சுற்றுச்சூழல் கெடவில்லைஅனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடைக்கப்பட்ட குடுவைகளில் (கேன்கள்) தண்ணீர் சப்ளை செய்து வருகிறோம். இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்று (ஐ.எஸ்.ஐ.) பெற்று கேன் வாட்டர் விற்பனை செய்கிறோம். எங்கள் நிறுவனங்கள் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித கேடும் விளைவிக்காத வகையில் ஆலைகளை அமைத்துள்ளோம். ஆலை அமைந்துள்ள எந்த இடத்திலும் எங்கள் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடவில்லை.காலவரையற்ற வேலைநிறுத்தம்இந்த சூழ்நிலையில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 252 நிறுவனங்களை மூடுவதற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளோம். எனவே, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கேன் வாட்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஏ.ஷேக்ஸ்பியர் கூறினார்.
No comments:
Post a Comment