விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே சன் அக்வாபிக் மினரல் வாட்டர் கம்பெனியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஊத்தங்காலில் உள்ள சன் அக்வா மினரல் வாட்டர் கம்பெனியில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் ஏழுமலை, குணசேகரன், அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், அலுவலகம், ஸ்டோர் ரூம், மைக்ரோ லேப், அனலைசிங், உற்பத்தி, பேக்கேஜிங் என அனைத்துப் பிரிவையும் ஆய்வு செய்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், "மினரல் வாட்டர் கம்பெனிகளிடம் ஐ.எஸ்.ஐ., சான்று, உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கம்பெனி துவங்க வர்த்தகத்திற்கென மின் இணைப்பு, கட்டடம் கட்ட பொதுப் பணித் துறையிடம் ஒப்புதல், உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி, தொற்று நோய்கள் ஏற்படாது என சுகாதாரத் துறையிடம் சான்று பெறவேண்டும்.
போர்வெல் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை குளோரினேஷன் செய்து, பூமியிலிருந்து 8 அடி உயரத்திலுள்ள நீர்தேக்கத் தொட்டியில் நான்கு மணி நேரம் பாதுகாப்பாக வைத்த பிறகே பேக்கேஜ் செய்ய வேண்டும்.
ஆனால், இங்கு தரையுடன் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்குவதோடு, எந்த விதிமுறைகளை
யும் பின்பற்றாமல் உள்ளது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment