Jan 3, 2014

கையெழுத்து வாங்கினால்குடிநீர் குறைகள் தீருமா?

சென்னை:மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்' என, தனியார் குடிநீர் நிறுவனங்கள், பொதுமக்களிடம், கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.தனியார் குடிநீர் நிறுவனங்கள், விற்பனைக்கு அனுப்பும் குடிநீர், தரமானது இல்லை என, தெரிய வந்ததால், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தானாக வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறது. உரிமம் பெறாத குடிநீர் நிறுவனங்கள், இழுத்து மூடப்பட்டன. "ஐ.எஸ்.ஐ., உரிமம் பெற்றிருந்தாலும், அனைத்து குடிநீர் நிறுவனங்களும், முறையாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கோரி, விண்ணப்பிக்க வேண்டும்' என, உத்தவிடப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற, குடிநீர் நிறுவனங்களிடம், 2.5 ஏக்கர் பரப்பளவு இடம் கட்டாயம் இருக்க வேண்டும். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள், குடிசைத் தொழில் போல், குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால், அனுமதி கோரி, விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், நிலத்தடி நீரை, இஷ்டம் போல் எடுக்கவும், நீர் வள ஆதாரத் துறையும் தடை விதித்துள்ளதால், குடிநீர் நிறுவனங்களுக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது. "குடிநீர் உற்பத்தி, மாசு ஏற்படுத்தும் தொழில் இல்லை என்பதால், வாரிய அனுமதி பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்; ஏற்கனவே எடுக்கும் பகுதியில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுக்க, அரசு அனுமதிக்க வேண்டும்' என, தனியார் குடிநீர் நிறுவனங்கள், வலியுறுத்தி வருகின்றன. கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நான்கு நாட்களாக, குடிநீர் கேன் வினியோகம் செய்வோர், நுகர்வோரிடம், பிரத்யேக படிவத்தில் கையெழுத்து பெறுகின்றனர். "பொதுமக்கள் கையெழுத்திட்ட படிவங்களை, அரசிடம் சமர்ப்பித்து, சிறு தொழில் குடிநீர் நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்துவோம்' என, தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அல்லது மினரல் வாட்டர் என்ற பெயரி"ல் வழங்கப்படும் தண்ணீர், அரசு வினியோகிக்கும், குளோரின் கலந்த, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட மோசமாக இருந்தால், அதற்கு விடை என்ன என்ற கேள்வி தொடர்கிறது.சிக்கல் ஏன்?தமிழகத்தில், 901 ஐ.எஸ்.ஐ., உரிமம் பெற்ற தனியார் குடிநீ"ர் நிறுவனங்களும், எந்த அனுமதியும் பெறாத, 400க்கும் மேற்பட்ட, "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்களும் உள்ளன. இவர்கள் தயாரிக்கும் குடிநீர் தரக்கட்டுப்பாட்டில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா, அவை என்ன என்று பொதுமக்களிடம் ஆதரவு பெறும்போது பெரும்பாலும் விளக்குவது இல்லை. அதற்கான தகவல்களும் தரப்படுவதில்லை.

No comments:

Post a Comment