Jan 12, 2014

கம்பம், கூடலூர் பகுதியில் போதை பொருட்கள் பறிமுதல்


கம்பம், ஜன. 12: 
கம்பம், கூடலூர் பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்த ரூபாய் 40 ஆயிரம் பெறுமானமுள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியில் அனுமதியின்றி வெளிமாநில புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சிசுந்தரம் மற்றும் அலுவலர்கள் ஜனகர் ஜோதி நாதன், மதன் கம்பம் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையை மேற்கொண்டனர். 
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில போதை பாக்குகள் மற்றும் புகையிலைகள் இருப்பு வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பாக்குகள் மற்றும் புகையிலைகளை பறிமுதல் செய்து அழித்தனர். 
பின்னர் கடை வியாபாரிகளிடம் இனிமேல் விற் பனை செய்தால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

No comments:

Post a Comment