சிதம்பரம், ஜன. 12:
சுற்றுலா தலமான சிதம்பரம் நகரில் ஐஸ்கிரீம் கடைகள், பேக்கரி மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா, சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பத்மநாபன் மற்றும் அலுவலர்கள் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் சிதம்பரம் கீழவீதியில் உள்ள உணவகம், பேக்கரி மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். பேக்கரி மற்றும் ஜஸ்கிரீம் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என்றும் ஐஸ்கிரீம் கடைகளில் ஐஸ்கிரீம் பொருட்கள் சரியான அளவில் கூலிங் வைக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். மேலும் காலாவதி பொருட்கள் இருந்தால் அதனை தனியாக ஒரு பெட்டியில் வைத்து அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
சுத்தம் ,சுகாதாரம், பூச்சி தடுப்பு ஆய்வில் கருத்தில் கொள்ள வேண்டும்
ReplyDelete