கோபி,நவ.21:
கோபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தலைமையிலான உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் கோபி பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் இருந்து பங்களாபுதூர் செல்லும் ரோட்டில் தடப்பள்ளி வாய்க்கால் கரை அருகில் வயல்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை சரக்கு ஆட்டோவில் இருந்து இறங்கிய சிலர் ஆட்டோவினுள் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குளிர்பானங்கள், நூடுல்ஸ் பாக்கெட், ஜாம் வகைகள், பிஸ்கெட், ரவை, மைதா மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை கீழே கொட்டி தீ வைத்து அழித்துள்ளனர்.
பின்னர் அவற்றை அருகில் உள்ள வாய்க்காலில் கொட்டி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கோபி பகுதியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றில் இருந்து காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை அப்புறப்படுத்தி தீயிட்டு அழித்தது தெரியவந்தது.

No comments:
Post a Comment