Nov 7, 2013

உடல் எடையை குறைப்பதாக நூதன மோசடி ஹெர்பல் மையங்களில் தரமற்ற உணவு பாக்கெட்டுகள் பறிமுதல்

நெல்லை, நவ. 7:
நெல்லை யில் உள்ள ஹெர்பல் மையங்களில் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தரமற்ற ஹெர்பல் உணவு பாட்டில்கள், டீத்தூள், ஹெர்பல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஹெல்த் கேம்ப் என்ற பெயரில் குடைகளை விரித்து மருந்து பாட்டில்களை பலர் விற்பனை செய்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடின உடற்பயிற்சி தேவை யில்லை எனும் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் முகாமிலே உடல் எடை, உயரம் ஆகியவற்றை கணக்கெடுத்து, தீர்வாக உணவு மற்றும் மருந்து பாட்டில்களை ஆயிரக்கணக் கான ரூபாய்க்கு விற்கின்றனர்.
இம்மருந்து பாட்டில்கள் தரமற்றதாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார் கள் சென்றன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், காளிமுத்து தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை மாநகரில் அதிரடி சோதனை நடத்தினர்.
டவுன் ஆர்ச் அருகே ஒரு எல்ஐசி பாலிசி பிரி மியம் செலுத்தும் அலுவலகத்தில் ஹெர்பல் உணவு மற்றும் மருந்து பாட்டில் கள் மொத்தமாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவற்றில் உணவு அல்லது மருந்துக்கான எவ்வித முத்திரையும் இல்லை. இவற்றை ரூ.1,000 வரை பேரம் பேசி அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அங்குள்ள ஹெர்பல் லைப் உணவு பாட்டில்கள், ஹெர்பல் டீ பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல, பாளை பெருமாள்புரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஹெர்பல் மையத்திலும் தரமற்ற உணவு பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராகிம், கலியனாண்டி, சிங்கராஜ் ஆகியோர் கைப்பற்றினர். உடல் எடையை குறைக்க உதவும் இத்தகைய மாவு பாக்கெட்டில் மக்காச்சோளம், பட்டாணி, கடலை மாவு கலந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 500 கிராம் உணவு டப்பாக்கள் 35ம், 200 கிராம் உணவு டப்பாக்கள் 25ம், ஹெர்பல் மாத்திரை 10 டப்பாக்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ்சந்திரபோஸ் கூறுகையில், “நெல்லையில் ஹெல்த் கேம்ப் என்ற பெயரில் முகாம் நடத்தி தரமற்ற ஹெர்பல் உணவுகளை விற்று வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறையின் அனுமதியின்றி விற்கப்படும் தரமற்ற உணவுகளை தற்போது கைப்பற்றி உணவு மாதிரிக்காக பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுக்கு பின், சட்டப்படி ஹெர்பல் மையங்களை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும். உணவு பழக்க வழக்கங்களுக்கு தகுந்த மருத்துவரை தேடி ஆலோசனை பெற வேண்டும். அதை விடுத்து போலி விளம்பரங்களை கண்டு ஏமாந்து, கண்ணில் காணும் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் ஆரோக்கியம் கெடும்,” என்றார்.
நெல்லை டவுனில் உள்ள ஒரு ஹெர்பல் மையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும். உணவு பழக்க வழக்கங்களுக்கு தகுந்த மருத்துவரை தேடி ஆலோசனை பெற வேண்டும். அதை விடுத்து போலி விளம்பரங்களை கண்டு ஏமாந்து, கண்ணில் காணும் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் ஆரோக்கியம் கெடும்,” என்றார்.

No comments:

Post a Comment