ராயபுரம், நவ.22-ராயபுரத்தில்
தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிலான
புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் சோதனைசென்னை
சவுகார்பேட்டையில் கடந்த 2 நாட்களுக்குமுன்பு உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ராயபுரம் பகுதியில் இருந்து புகையிலை பொருட்கள் சென்னையின்
மற்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து
உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி
நாராயணன் தலைமையில் சுந்தரராஜன், ஜெயகோபால், சதாசிவம், மணிமாறன், ஜெயராஜ்
அடங்கிய தனிப்படையினர் ராயபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்தனர். ரூ.1.12 கோடி புகையிலை பறிமுதல் அப்போது,
ராயபுரம் சூரியநாராயண தெருவில் உள்ள தனியார் குடோனில் புகையிலைப்
பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று
மாலை அங்கு சென்ற அதிகாரிகள், பாலாஜி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில்,
இயங்கி வரும் தனியார் போக்குவரத்து நிறுவன குடோனில் சோதனையிட்டனர்.அங்கு
ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிலான 32 டன் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்
இருப்பது தெரியவந்தது. அங்கிருந்த ஆவணங்களை சோதனையிட்டபோது, புதுடெல்லியில்
இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்வதற்காக இந்த புகையிலை பொருட்கள் இங்கு
கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை பறிமுதல்
செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,
தனியார் குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை
பொருட்களை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து சென்று இன்று
அழிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment