Oct 30, 2013

சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை நகராட்சி அதிகாரிகள் மெத்தனம்

ஆத்தூர்: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிக்குப்பட்ட கறிக்கடைகளில், சுகாதாரமற்ற முறையில், இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர்.
ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கறிக்கடைகள் உள்ளன. நகராட்சி பகுதிக்குள் கறிக்கடை வைக்க, நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
இறைச்சி வெட்டுதல் மற்றும் கையாளும் பணியில் ஈடுபடும் கடை உரிமையாளரும், உரிமம் பெற்றிருக்க வேண்டும். கறிக்கடையில் வெட்டப்படும் எலும்பு உள்ளிட்ட கழிவு பொருட்களை, மூடியுள்ள தொட்டியில் போட்டு வைக்கவேண்டும். ஆடு, மாடு மற்றும் கோழிகளை ரோட்டில் வெட்டக் கூடாது. நகராட்சிக்குட்பட்ட இறைச்சி கூடாரங்களில் தான் வெட்ட வேண்டும்.
ஆனால், நகராட்சி அனுமதி பெறாமல், சுகாதாரமற்ற முறøயில் பல இடங்களில், இறைச்சி விற்பனை செய்கின்றனர்.
ஆத்தூர் கிரைன்பஜாரில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி, திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால், ஆடு, மாடு, கோழிகளை சாலைகளில் அறுப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.

No comments:

Post a Comment